உள்ளூர் செய்திகள்

பூச்சிக் கொல்லி மருந்து தெளித்ததால் பாதிப்படைந்த பருத்தி செடிகள்.

பூச்சிக் கொல்லி மருந்து தெளித்ததால் பருத்தி செடிகள் கடுமையாக பாதிப்பு

Published On 2022-06-20 10:32 GMT   |   Update On 2022-06-20 10:32 GMT
ஏர்வாடி பகுதியில் பருத்தி சாகுபடி செய்து வருகிறார். இவரது வயலுக்கு அருகில் ஏர்வாடியை சேர்ந்த பழனி என்பவர் நெல் சாகுபடி செய்து வருகிறார். பழனி தனது நெற்பயிருக்கு களைக்கொல்லி மருந்து தெளித்தாக கூறப்படுகிறது.

மெலட்டூர்:

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுக்கா மெலட்டூர் அருகே உள்ள கரம்பத்தூர் வடக்குத்தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜன் (60). விவசாயி. இவர் ஏர்வாடி பகுதியில் பருத்தி சாகுபடி செய்து வருகிறார். இவரது வயலுக்கு அருகில் ஏர்வாடியை சேர்ந்த பழனி என்பவர் நெல் சாகுபடி செய்து வருகிறார். பழனி தனது நெற்பயிருக்கு களைக்கொல்லி மருந்து தெளித்தாக கூறப்படுகிறது.

பழனி தெளித்த களைக்கொல்லி மருந்தால் கோவிந்தராஜன் சாகுபடி செய்திருந்த பருத்தி செடிகள் பாதிக்கப்பட்டு காய், பிஞ்சுகள், பூக்கள் கருகி வீணாகியதாக கூறப்படுகிறது. பருத்தி செடிகள் பாதிப்பு குறித்து கோவிந்தராஜன் மெலட்டூர் போலீசில் புகார் கொடுத்தார். கோவிந்தராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் மெலட்டூர் போலீசார் பருத்தி செடிகள் பாதிப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News