உள்ளூர் செய்திகள்

போச்சம்பள்ளி அருகே உள்ள நாகரசம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நாட்டு நலப்பணி திட்ட முகாமில் கால்நடைகளுக்கு சிறப்பு சிகிச்சை முகாம் நடைபெற்றது.

நாகராசம்பட்டி அரசு பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்

Published On 2022-12-29 09:40 GMT   |   Update On 2022-12-29 09:40 GMT
  • மாணவர்கள் விடுதி, தெருக்கள் உள்ளிட்ட வைகளை தூய்மை படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
  • இந்த முகாமில் தலைமை ஆசிரியர் முருகன் தலைமை வகித்தார்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவாட்டம் போச்சம்பள்ளி அருகேயு ள்ள நாகரசம்பட்டியில் இயங்கி வரும் பெரியார் ராமசாமி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடந்தது.

இந்த முகாமில் மாணவர்கள் நாட்டு நலப்பணி திட்டத்தில் உள்ள 25 -க்கும் மேற்ப்ப ட்ட மாணவர்கள் பொது சேவையில் ஈடுபட்டு பள்ளி வளாகம் மற்றும் மாணவர்கள் விடுதி, தெருக்கள் உள்ளிட்ட வைகளை தூய்மை படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் முன்னதாக பள்ளியில் அறிமுக விழா நடைபெற்றது. இதில் இப்பகுதியில் உள்ள கால்நடைகளுக்கு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.

இதில் கால்நடை மருத்துவர் மணிமேகலை கலந்து கொண்டு 100-க்கும் மேற்ப்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தினார்.

தொடர்ந்து கால்நடைகளை எவ்வாறு பராமரிப்பு செய்வது மற்றும் தற்போதைய சிதோசன நிலைக்கு கால்நடைகளை எவ்வாறு காப்பது என்று பொதுமக்களிடையே தெளிவாக எடுத்துரைத்தார்.

இந்த முகாமில் தலைமை ஆசிரியர் முருகன் தலைமை வகித்தார். திட்ட அலுவலர் பெரமன் முன்னிலை வகித்து முகாமிற்கான ஏற்பாடுகளை செய்து மாணவர்களை வழிநடத்தினார்.

உதவி திட்ட அலுவலர் சங்கர் வரவேற்றார், இதில் பேரூராட்சி கவுன்சிலர் ரமேஷ், பட்டதாரி ஆசிரியர்கள் மூர்த்தி, எல்லம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து பள்ளி வளாகத்தில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் மாணவர்கள் பெற்றோர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News