உள்ளூர் செய்திகள்

கோவை கலெக்டர் பெயரில் போலி வாட்ஸ்-அப் ஐ.டி-மகாராஷ்டிரா மாநில நபரை பிடிக்க சைபர் கிரைம் போலீசார் தீவிரம்

Published On 2022-06-24 09:44 GMT   |   Update On 2022-06-24 09:44 GMT
  • இது போலியான ஐ.டி யாரும் இதில் பணம் தர வேண்டாம் என தெரிவித்திருந்தார். ேமலும் மோசடி நபர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.
  • குறிப்பிட்ட அந்த மொபைல் எண், மகாராஷ்டிரா மாநில முகவரியில் பதிவு செய்யப்பட்டது என்று தெரியவந்துள்ளது.

கோவை:

கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் பெயரில் போலியான வாட்ஸ் அப் ஐ.டி வைத்து பணம் வசூல் நடத்தப்பட்டு தெரியவந்தது.

இது தொடர்பாக கலெக்டர், தனது டுவிட்டர் பக்கத்தில் சில மோசடி நபர்கள் தனது போட்டோவை முகப்பு பக்கத்தில் வைத்து போலியான வாட்ஸ் அப் எண்ணில் அமேசான் பரிசு கூப்பன் இருக்கிறது.

பணம் கொடுத்து இந்த கூப்பன் வாங்கி கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளனர். இது போலியான ஐ.டி யாரும் இதில் பணம் தர வேண்டாம் என தெரிவித்திருந்தார். ேமலும் மோசடி நபர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

பின்னர் இதுகுறித்து கலெக்டர் உடனடியாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதற்கிடையே சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், குறிப்பிட்ட அந்த மொபைல் எண், மகாராஷ்டிரா மாநில முகவரியில் பதிவு செய்யப்பட்டது என்று தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்ட மொபைல் எண், ஏற்கனவே நடந்த மோசடிகளில் தொடர்புடையது என்பதும் ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

ஐ.ஏ.எஸ். அதிகாரியின் பெயரை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டுள்ள அந்த மர்ம நபரை பிடிக்க கோவை சைபர் கிரைம் போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News