உள்ளூர் செய்திகள்

சாத்தான்குளம் அருகே சாலையோரம் அபாய மணல் குவியல், பள்ளங்கள்

Published On 2023-05-30 08:47 GMT   |   Update On 2023-05-30 08:47 GMT
  • சிறப்பூர் அடுத்த பகுதியில் இருந்து சாமிதோப்பு இடையே உள்ள சாலையோரம் மணல் குவியல்,பள்ளங்கள் காணப்படுகிறது.
  • கனரக வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் எதிரே வரும்போது இரு சக்கரம், கார்களில் வருபவர்கள் வழிவிட சாலையோரத்தில் இறங்கினால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது.

சாத்தான்குளம்:

சாத்தான்குளத்தில் இருந்து திசையன்விளை செல்ல விஜயராமபுரம், சிறப்பூர், சாமிதோப்பு, நடுவக்குறிச்சி வழிச்சாலை பிரதான சாலையாக உள்ளது.

இந்த சாலையில் இரவு- பகலாக ஏராளமான வாகனங்கள் சென்று திரும்புகின்றன. இந்த சாலையில் சிறப்பூர் அடுத்த பகுதியில் இருந்து சாமிதோப்பு இடையே உள்ள சாலையோரம் மணல் குவியல்,பள்ளங்கள் காணப்படுகிறது.

இதனால் பஸ், லாரி மற்றும் கனரக வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் எதிரே வரும்போது இரு சக்கரம், கார்களில் வருபவர்கள் வழிவிட சாலையோரத்தில் இறங்கினால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது.

மேலும் சாமிதோப்பு அடுத்து சுடலைமாட சுவாமி கோவில் முன்பு சாலையோரத்தில் கரையே காணப்படுகிறது. இரவு நேரத்தில் இது தெரியாமல் வருபவர்கள் சாலை மேட்டில் இருந்து கீழே விழுந்து வாகனங்கள் கவிழும் அபாய நிலையும் காணப்படுகிறது.

இந்த வழியே அடிக்கடி பயணிப்பவர்கள் இதனை சுதாரித்து சென்று வருகின்றனர். இந்த வழியை புதியதாக பயன்படுத்தி வருபவர்கள் இந்த தருணம் தெரியாமல் பெரிய விபத்து நிகழ வாய்ப்பு அதிகமாக காணப்படுகிறது.

ஆதலால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இதனை ஆய்வு நடத்தி சாலையோரத்தில் குவிந்துள்ள மணல் குவியலை அப்புறப் படுத்துவதுடன், சாலையோரத்தில் கரையே இல்லாத பகுதியில் மணலை கொண்டு கரை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News