உள்ளூர் செய்திகள்

வேதாரண்யம் கடற்கரையில் தர்ப்பண மண்டபத்தை கலெக்டர் அருண் தம்புராஜ் திறந்து வைத்தார்.

வேதாரண்யம் கடற்கரையில் தர்ப்பண மண்டபம்-கலெக்டர் திறந்து வைத்தார்

Published On 2022-07-29 09:34 GMT   |   Update On 2022-07-29 09:34 GMT
  • புனித நீராட வரும் பக்தர்கள் மூதாதயர்களுக்கு திதி கொடுப்பதற்கு வசதியாக அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளிட்ட தர்ப்பண மண்டபம் கட்டப்பட்டது.
  • தர்ப்பண மண்டபத்தை நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் திறந்து வைத்தார்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் சன்னதி கடற்கரையில் நகராட்சியின் சார்பில் 2020-22 ஆண்டு ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.69 லட்சத்தில் தை அமாவாசை, ஆடி அமாவாசை காலங்களில் புனித நீராட வரும் பக்தர்கள் மூதாதயர்களுக்கு திதி கொடுப்பதற்கு வசதியாக அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளிட்ட தர்ப்பண மண்டபம் கட்டப்பட்டது.

தர்ப்பண மண்டபத்தை நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, வேதாரண்யம் கோட்டாட்சியர் ஜெயராஜ பவுலின், நகர மன்ற தலைவர் புகழேந்தி, நகராட்சி ஆணையர் ஹேமலதா, பொறியாளர் இப்ராஹிம், ஒப்பந்தக்காரர் அன்பழகன், தாசில்தார் ரவிச்சந்திரன், ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் ராமலிங்கம், பாஸ்கரன், நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News