உள்ளூர் செய்திகள்

சொக்கநாதருடன் பாதயாத்திரையாக தருமபுரம் ஆதீனம் புறப்பட்டு சென்றார்.

சட்டைநாதர் கோவிலில் இருந்து சொக்கநாதருடன் வெற்றிவேல் யாத்திரை புறப்பட்ட தருமபுரம் ஆதீனம்

Published On 2023-05-26 09:18 GMT   |   Update On 2023-05-26 09:18 GMT
  • தருமை ஆதீனத்திற்கு வீதிதோறும் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
  • பாத அபிஷேகம் செய்து பக்தர்கள் வழிப்பட்டனர்.

சீர்காழி:

சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோவில் கும்பாபி ஷேகம் நேற்று முன்தினம் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் விமர்சையாக நடந்து முடிந்தது.

இந்த நிலையில் தருமபுரம் ஆதீனம் குரு லிங்க சங்கம வெற்றிவேல் யாத்திரையாக சொக்கநாதர் பெருமானுடன் மீண்டும் தருமபுரம் புறப்பட்டார்.

சட்டைநாதர் சுவாமி கோயிலிருந்து சொக்கநாதர் பெருமானை சுமந்து தம்பிரான் சுவாமிகளுடன் புறப்பட்ட தருமை ஆதீனத்திற்கு வீதிதோறும் பூர்ண கும்ப மரியாதையும், பாதஅபிஷேகமும் செய்து பக்தர்கள் வழிப்பட்டனர்.

பாதயாத்திரையில் தருமபுரம் கல்லூரி முதல்வர் சாமிநாதன்,

கோயில் காசாளர் செந்தில், தமிழ் சங்கத்தலைவர் மார்கோனி, ஆன்மிக பேரவை நிறுவனர் இராம.சேயோன், இந்து முன்னணி மாவட்ட தலைவர் சரண்ராஜ், திருப்பணி உபயதாரர்கள் முரளிதரன், கணேஷ், ஆசிரியர் கோவி.நடராஜன், கோயில் சொத்து பாதுகாப்பு பேரவை செயலர் பாலசுப்ர மணியன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

Tags:    

Similar News