2-வது நாளாக தொடர்கிறது- தென்காசியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் போராட்டம்
- ஊராட்சி செயலாளர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்குதல் வேண்டும், அனைத்து பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று போராட்டம் நடந்தது.
- தென்காசி மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், குருவிகுளம், மேலநீலிதநல்லூர், ஆலங்குளம், கீழப்பாவூர், கடையம் உள்ளிட்ட அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் இந்த சிறுவிடுப்பு போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
தென்காசி:
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் திணிக்கப்படும் பணி நெருக்கடிகள், காலம் கடந்த இரவு நேர ஆய்வுகள், வாட்ஸ் அப் காணொலி ஆய்வுகள் அனைத்தையும் கைவிட வேண்டும். ஊராட்சி செயலாளர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்குதல் வேண்டும், அனைத்து பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று போராட்டம் நடந்தது.
இன்று 2-வது நாளாக நடந்த போராட்டத்தில் ஏராளமோனார் பணிகளை புறக்கணித்தனர். இதனால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.தென்காசி மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், குருவிகுளம், மேலநீலிதநல்லூர், ஆலங்குளம், கீழப்பாவூர், கடையம் உள்ளிட்ட அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் இந்த சிறுவிடுப்பு போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.