உள்ளூர் செய்திகள்

மலையூருக்கு பஸ் போக்குவரத்து இயக்க கோரிகலெக்டரிடம் மாணவிகள் மனு

Published On 2023-04-03 10:01 GMT   |   Update On 2023-04-03 10:01 GMT
  • தினமும் மாணவ, மாணவிகள் பாப்பாரப்–பட்டிக்கு வருவது என்றால் அதிகாலை 5 மணிக்கு எழுந்து தங்களை தயார் செய்து கொண்டு 11 கி.மீ. தூரம் நடந்து வரவேண்டும்.
  • மாணவ, மாணவிகள் காலை உணவு எடுத்து கொள்ளாமல் பாதி வழியில் மயங்கி கீழே விழுந்து அவதிக்குள்ளாகி உள்ளனர்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை அடுத்த பிக்கிலி பஞ்சாயத்து மலையூர் கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

சாலை வசதி-பஸ் வசதி

பாப்பாரப்பட்டியில் இருந்து மலையூருக்கு மலை வழியாக தான் செல்ல வேண்டும். இந்த ஊருக்கு செல்ல சரியான சாலை வசதி கிடையாது.

மலையூரில் இருந்து 11 கி.மீ தொலைவில் உள்ள பாப்பாரப்பட்டிக்கு தினமும் பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் நடந்து வந்தும் அல்லது இருசக்கர வாகனங்கள், சைக்கிளில் வந்து பஸ் ஏறுவார்கள்.

பள்ளி மாணவிகள் கலெக்டரிடம் மனு

இந்த நிலையில் மலையூரில் இருந்து பாப்பாரப்பட்டிக்கு வந்து அரசு பள்ளியில் படிக்கும் அரசு மாணவிகள் 10-க்கும் மேற்பட்டோர் இன்று தருமபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் சாந்தியை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தருமபுரி மாவட்டம் பாப்பாரபட்டியை அடுத்த பிக்கிலி பஞ்சாயத்து மலையூர் கிராமத்தில் குடும்பத்துடன் நாங்கள் வசித்து வருகின்றோம். மலையூரில் தார்சாலை வசதி ஏற்படுத்தி 11 ஆண்டுகளாகின.

ஆனால்,இதுவரை மலையூரில் பஸ் போக்குவரத்து வசதி கிடையாது. நாங்கள் பாப்பாரப்பட்டியில் உள்ள அரசு பள்ளிக்கு வருவது என்றால், 11 கி.மீ. தூர தொலைவில் நடந்து வந்துதான் பள்ளிக்கு வரவேண்டிய அவலநிலை உள்ளது.

மேலும், அந்த பகுதியில் இருசக்கர வாகனங்களில் லிப்ட் கேட்டு தான் பள்ளிக்கு விரைந்து வர வேண்டிய சூழ்நிலை உள்ளது. தினமும் மாணவ, மாணவிகள் பாப்பாரப்–பட்டிக்கு வருவது என்றால் அதிகாலை 5 மணிக்கு எழுந்து தங்களை தயார் செய்து கொண்டு 11 கி.மீ. தூரம் நடந்து வரவேண்டும். அவ்வாறு வரும் மாணவ, மாணவிகள் காலை உணவு எடுத்து கொள்ளாமல் பாதி வழியில் மயங்கி கீழே விழுந்து அவதிக்குள்ளாகி உள்ளனர்.

வனவிலங்குகள் அச்சுறுத்தல்

மேலும், சிலருக்கு அல்சர் போன்ற நோய்களுக்கு ஆளாகி உள்ளனர். இதேபோன்று மாலையில் வீடு திரும்பும்போது பள்ளி மாணவிகளுக்கான தங்களுக்கு வன விலங்கு–களால் அச்சுத்தலும் ஏற்படுகிறது. எனவே, எங்களது பாதுகாப்பு கருதி மலையூர் கிராமத்திற்கு உடனடியாக பஸ் போக்கு–வரத்து வசதி கொடுக்குமாறு கேட்டுக் கெள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

Tags:    

Similar News