உள்ளூர் செய்திகள்
பாவூர்சத்திரம் அருகே விவசாயிகளுக்கு தென்னை டானிக் செயல்முறை விளக்கம்
- கீழப்பாவூர் வட்டாரத்தில் கிராமப்புற பணி அனுபவத் திட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
- ஒரு லிட்டர் மருந்தை 4 லிட்டர் தண்ணீரில் கலந்து 200 மில்லி வீதம் ஒரு மரத்திற்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை வழங்க வேண்டும்என செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
தென்காசி:
தூத்துக்குடி மாவட்டம், கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இறுதியாண்டு மாணவிகள் கீழப்பாவூர் வட்டாரத்தில் கிராமப்புற பணி அனுபவத் திட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி தென்காசி மாவட்டம் கழுநீர்குளம் கிராம மக்களுக்கு தென்னை டானிக் பற்றிய செயல்முறை விளக்கம் வழங்கப்பட்டது.
இது தென்னைக்கு தேவையான சத்துகளையும்,வளர்ச்சி ஊக்கிகளையும் வழங்குகின்றது. இதனைதெளிப்பதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான தேங்காய்கள் பிடிப்பதுடன் குறும்பை உதிர்வையும் குறைக்கின்றது. ஒரு லிட்டர் மருந்தை 4 லிட்டர் தண்ணீரில் கலந்து 200 மில்லி வீதம் ஒரு மரத்திற்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை வழங்க வேண்டும்என செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. மாணவிகள் வழங்கிய செயல் விளக்கத்தில் விவசாயிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பயனடைந்தனர்.