உள்ளூர் செய்திகள்

கோவையில் கனமழை பெய்த போதும் முன்எச்சரிக்கை நடவடிக்கையால் எந்த பாதிப்பும் இல்லை-அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

Published On 2022-11-13 08:57 GMT   |   Update On 2022-11-13 08:57 GMT
  • மாநகராட்சியில் கடந்த ஆண்டு பெய்த கனமழையால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன.
  • கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் அதிக பட்சமாக 10.76 செ.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது.

கோவை,

கோவை ரெயில் நிலையம் அருகே உள்ள லங்கா கார்னர் ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணி நடந்தது. இந்த பணியை அமைச்சர் செந்தில்பாலாஜி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவை மாநகராட்சியில் கடந்த ஆண்டு பெய்த கனமழையால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன. சரியான மழை நீர் வடிகால் இல்லாத சூழல் இருந்தது. ஆகையால், நிறைய இடங்களில் பாலங்களின் அடியிலும், சாலைகளிலும் மழைநீர் தேங்கியது. இதையெல்லாம் கவனத்தில் கொண்டு கடந்த ஆண்டு எந்தெந்த இடங்களில் பாதிப்புகள் ஏற்பட்டது என்பதை உறுதி செய்து. இந்த ஆண்டு அந்த பாதிப்பு இல்லாத அளவிற்கு முன் னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.

கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் அதிக பட்சமாக 10.76 செ.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் நேற்று பெய்த கனமழைக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை கோவை மாவட்டத்தில் 32 பெரிய வாய்க்கால்கள் உள்ளன.

அதில், 128 கி.மீ. அளவிற்கு ரூ.2.45 கோடி மதிப்பில் அதற்குண்டான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு ள்ளன.மழை நீர் வடிகால்கள் பொருத்தவ ரை 273 கி.மீ. வரை ரூ.5. 06 கோடி மதிப்பில் பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது.

மழை நீரை வெளியேற்றும் மோட்டார்கள் தேவையான அளவு உள்ளது. ஆகையால், இதைவிட அதிக அளவில் மழை பெய்தாலும் எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க மாவட்டம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாதிக்கப்படக்கூடிய இடங்களை மாவட்ட கலெக்டர், மாநகராட்சி மேயர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஆட்சியில் கோவை மாநகர பகுதிகளில் சாலைப்பணிகள் மேற்கொள்ளவில்லை. கடந்த ஒன்றரை வருடங்களில் ரூ.214 கோடி மதிப்பில் சாலைப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, கோவை மாநகராட்சிக்கு சிறப்பு நிதியாக ரூ.200 கோடியை விடுவிக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதில் ரூ.26 கோடி. முதற்கட்டமாக விடுவிக்கப்பட்டு டெண்டர் முடிக்கப் பட்டு, அந்தப் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் மாதத்திற்குள் மாநகராட்சி பகுதியில் உள்ள சேதம் அடைந்த சாலை, புதுப்பிக்கப்பட வேண்டிய சாலைகள் அனைத்தும் சீரமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

Similar News