உள்ளூர் செய்திகள்

செங்கோட்டை நகராட்சி பூங்காவில் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தபோது எடுத்தபடம்.

செங்கோட்டை நகராட்சி பூங்காவில் ரூ.1½கோடியில் மேம்பாட்டு பணி -கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

Published On 2022-07-25 09:11 GMT   |   Update On 2022-07-25 09:11 GMT
  • பூமி பூஜையை கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
  • நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவா்,உறுப்பினா்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

செங்கோட்டை:

செங்கோட்டை நகராட்சி முத்துசாமி பூங்காவில் ரூ.1கோடியே 59லட்சம் மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.

பூஜையை கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

நகர்மன்ற தலைவா் ராமலெட்சுமி, துணைத் தலைவா் நவநீதகிருஷ்ணன், நகர்மன்ற உறுப்பினா்கள் எஸ்எம்.ரஹீம், முருகையா, பேபிரெசவுபாத்திமா, இசக்கித்துரைபாண்டியன், சுப்பிரமணியன், ஜெக நாதன், முத்துப்பாண்டி, இசக்கியம்மாள், சுடர் ஒளி, வேம்புராஜ், பொன்னு லிங்கம் (சுதன்), ராம்குமார், செண்பகராஜன், அ.தி.மு.க. மாவட்ட அவைத்தலைவா் வீபி.மூர்த்தி, மாவட்ட துணைச்செயலாளா் பொய்கை மாரியப்பன், நகர செயலாளா் கணேசன், எம்.ஜி.ஆர். இளைஞரணி சக்திவேல், முன்னாள் நகர்மன்ற உறுப்பினா்கள் செந்தில் ஆறுமுகம், ராஜா கோபாலன், திலகர், ஞானராஜ், தி.மு.க. நகர துணைச்செயலாளா் குட்டி ராஜா, அவைத்தலைவா் மணிகண்டன், நகர இலக்கிய அணி மாடசாமி, வார்டு செயலாளா் கோபால்யாதவ், இசக்கி முத்து, வனத்துறை விக்னேஷ், சூர்யா, ஹரிஹர லெட்சுமணன், ஒப்பந்தகாரர் ஸ்ரீசபரி சாஸ்தா இன்ப்ரா பிரைவேட் லிமிடேட் நிர்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News