உள்ளூர் செய்திகள் (District)

மேட்டுப்பாளையம் மைதானம் மாரியம்மன் கோவிலில் குண்டம் இறங்கிய பக்தர்கள்

Published On 2023-04-04 09:31 GMT   |   Update On 2023-04-04 09:31 GMT
  • 30 -ந் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.
  • பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் குண்டம் இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர்.

மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையம் - ஊட்டி செல்லும் சாலையில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மைதானம் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் 92 -ம் ஆண்டு திருவிழா கடந்த 30 -ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதனைத்தொடர்ந்து 31-ந் தேதி சுப்பிரமணியசாமி கோவிலில் இருந்து பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சியும்,நேற்று காலை குண்டம் திறத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு தினந்தோறும் பல்வேறு சிறப்பு பூஜைகளும், அபிஷேக அலங்காரங்களும் நடைபெற்றன.விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி இன்று காலை தொடங்கியது. தலைமை பூசாரி மோகன்குமார் தலையில் கரகம் எடுத்து பூப்பந்தினை உருட்டி விட்டு குண்டம் இறங்கி நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் லோகநாதன், கோவை மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் கவிதா கல்யாணசுந்தரம், தலைமை ச்செயற்குழு உறுப்பினர்கள் டி.ஆர்.சண்முகசுந்தரம், அஷ்ரப் அலி, தி.மு.க. காரமடை கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.டி.கல்யாணசுந்தரம், மேட் டுப்பாளையம் நகராட்சி ஆணையர் வினோத், வட்டாட்சியர் மாலதி, நகர் மன்ற உறுப்பினர்கள் விஜய காண்டீபன், உமா மகேஸ்வரி, தனசேகரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், திருக்கோவில் கமிட்டியினர் உட்பட 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பக்தர்களின் பாதுகா ப்பிற்காக மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீத கிருஷ்ணன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு விழா கமிட்டி குழுவினரால் அன்னதா னமும் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News