பாரம்பரிய நெல் விதைகள் வினியோகம்- அதிகாரி தகவல்
- இரும்பு சத்து, நார் சத்து அதிகம் கொண்டது. சர்க்கரை நோயாளிகள், வாய் அல்சர் நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
- விவசாயிகள் ஆதார் கார்டு நகலுடன் வேளாண் உதவி அலுவலர் பரிந்துரையில் வட்டார வேளாண்மை கிடங்குகளில் பெற்றுக் கொள்ளலாம்.
கும்பகோணம்:
திருப்பனந்தாள் வட்டார த்தில் முதல்முறையாக வேளாண்மை விரிவாக்க மையம் மூலம் பாரம்பரிய நெல் விதைகள் வினியோகம் செய்யப்படுவதாக வேளா ண்மை உதவிஇயக்குனர் விஜயலட்சுமி தெரிவித்து ள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு முகமை திட்டத்தின் மூலம் பாரம்பரிய நெல் விதை ரகங்களான மாப்பிள்ளை சம்பா, கருடன் சம்பா, கருப்பு கவுனி ரகங்கள் 50 சதவீத மானிய விலையில் கிலோ ரூ. 12.50 விகிதம் மாப்பிள்ளை சம்பா 840 கிலோ, கருடன் சம்பா 200 கிலோ, கருப்பு கவுனி 300 கிலோ இருப்பு வைத்து விநியோகிக்கப்பட உள்ளது.
தேவைப்படும் ஆர்வமுள்ள விவசாயிகள் ஆதார் கார்டு நகலுடன் வேளாண் உதவி அலுவலர் பரிந்துரையில் வட்டார வேளாண்மை கிடங்குகளில் பெற்றுக் கொள்ளலாம். மாப்பிள்ளை சம்பா நீண்ட கால சம்பா ரகம் 150 முதல் 160 நாள் வயது கொண்டது,
இரும்பு சத்து, நார் சத்து அதிகம் கொண்டது. சர்க்கரை நோயாளிகள், வாய் அல்சர் நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கருப்பு கவுனி நீண்ட கால சம்பா பயிர் 150 நாள் வயது கொண்டது. அதிக மருத்துவ குணம் உடையது.கருடன் சம்பா, கருடன் பச்சையம் குறைவாக உள்ள அரிசி வகைகளில் ஒன்று.
ரத்தசோகை உள்ளவர்கள் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும், வைட்டமின் தாதுக்கள் நிறைந்த அரிசி வகையாகும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.