உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி

Published On 2022-09-12 09:30 GMT   |   Update On 2022-09-12 09:30 GMT
  • அண்ணாவின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் நடைபெருகிறது.
  • கியர் இல்லாத சைக்கிளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

கோவை,

அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற உள்ள மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டியில் மாணவர்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சமீரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி நடைபெருகிறது.

போட்டி கோவைப்புதூரில் உள்ள தனியார் கல்லூரி ரோட்டில் வரும் 15-ந் தேதி காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ. தூரமும், மாணவிகளுக்கு 10 கி.மீ. தூரமும், 15 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரமும், மாணவிகளுக்கு கி.மீ. 15 கி.மீ. தூரமும், 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரமும், மாணவிகளுக்கு 15 கி.மீ. தூரமும் போட்டி நடத்தப்பட உள்ளது.

இப்போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் இந்தியாவில் தயாரான கியர் இல்லாத சைக்கிளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பள்ளி தலைமை ஆசிரியரிடம் இருந்து வயது சான்றிதழ் பெற்று, மாவட்ட விளையாட்டு, இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்தில் வரும் 13-ந் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இப்போட்டியில், முதல் மூன்று இடங்களை பிடிப்பவர்களுக்கு பரிசுத் தொகையாக தலா ரூ.5000, ரூ.3000, ரூ.2000 வீதமும், 4 முதல் 10-ம் இடம் வரை வருபவர்களுக்கு தலா ரூ.250 வீதம் பரிசுத் தொகை வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News