உள்ளூர் செய்திகள்
காவேரிப்பட்டணத்தில் தி.மு.க வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
- பேருந்து நிலையத்திற்கு ஊர்வலமாக வந்து பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
- பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில் குமார் தலைமை வகித்தார்.
காவேரிபட்டணம்,
தமிழர்களின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தடை இல்லை என உச்ச நீதிமன்ற தீர்ப்பு வழங்கியது.
இதனையடுத்து காவேரிப்பட்டணத்தில் தி.மு.க.வினர் 10-க்கும் மேற்பட்ட காளை மாடுகளுக்கு மாலை அணிவித்து ,பேருந்து நிலையத்திற்கு ஊர்வலமாக வந்து பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில் குமார் தலைமை வகித்தார். மேலும் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செந்தில் குமார், மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் முக்கிய பிரமுகர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இதே போல் காவேரிப்பட்டணம் தி.மு.க மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி தலைமையில் பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடி னார்கள்.