உள்ளூர் செய்திகள்

கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

குறைவு முத்திரை தீர்வையினை செலுத்தி ஆவணத்தை விடுவிக்கலாம் - கலெக்டர் தகவல்

Published On 2023-01-14 09:22 GMT   |   Update On 2023-01-14 09:22 GMT
  • முத்திரைத் தீர்வையினை செலுத்தி ஆவணங்களை கிரயத்தாரர்கள் விடுத்துள்ளக் கொள்ளலாம்.
  • கலெக்டர் அலுவலகத்தில் தனித் துணை ஆட்சியரை தொடர்புக் கொண்டு பயன்படுத்திக் கொள்ள வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :-

தமிழ்நாடு அரசு பதிவுத்துறை சார்பாக 1.1.2023 முதல் 31.3.2023 வரை சிறப்பு முனைப்பு இயக்கமாக தஞ்சாவூர் வருவாய் மாவட்டம், பதிவு மாவட்டமாகவும் 4 அலகுகளை உள்ளடங்கிய 49 சார் பதிவகத்தில் பதிவு செய்து குறைவு முத்திரை தீர்வை செலுத்தப்படாமல் உள்ளது.

நாளது வரை நிலுவையில் உள்ள இனங்களான இந்திய முத்திரைச் சட்டம் 1899 பிரிவுகள் 47 (A1), 47 (A3) மற்றும் வருவாய் வசூல் சட்டத்தின் கீழ் உள்ள ஆவணங்களில் ஏற்பட்டுள்ள முத்திரைத் தீர்வையினை செலுத்தி ஆவணங்களை கிரயத்தாரர்கள் விடுத்துள்ளக் கொள்ளலாம் என்று பதிவுத்துறை தலைவரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அவ்வாறான கிரையதாரர்கள் அனைவரும் தங்களது ஆவணங்களுக்கு ஏற்படும் குறைவு முத்திரை தீர்வையினை செலுத்தி ஆவணத்தை விடுத்துக் கொள்ள தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அறை எண் 119-ல் உள்ள தனித் துணை ஆட்சியரை (முத்திரைக் கட்டணம்) தொடர்புக் கொண்டு இச்சிறப்பு முனைப்பு இயக்கத்தை பயன்படுத்திக் கொள்ள கிரையதாரர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News