உள்ளூர் செய்திகள்

பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவனுக்கு சப்-இன்ஸ்பெக்டர் பிரபகுமார் பரிசு வழங்கிய போது எடுத்த படம்.

ஆறுமுகநேரி பள்ளியில் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published On 2023-06-22 08:39 GMT   |   Update On 2023-06-22 08:39 GMT
  • தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி கா.ஆ. மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரபகுமார், வேல்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
  • நிகழ்ச்சியில் போதை விழிப்புணர்வு பேச்சுப்போட்டி நடந்தது.

ஆறுமுகநேரி:

தமிழகத்தில் மாணவ சமுதாயத்திடம் போதை பழக்கம் ஏற்படுவதை தடுக்கும் நடவடிக்கையாக பள்ளிகள் தோறும் ' புத்தகம் வேண்டும் போதை பொருள் வேண்டாம்' என்ற வாசகத்துடன் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை காவல்துறை சார்பில் நடத்த தமிழக டி. ஜி.பி. சைலேந்திரபாபு நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதன்படி தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி கா.ஆ. மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரபகுமார், வேல்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் கண்ணன் வரவேற்று பேசினார். ஆசிரியர்கள் செண்பகவல்லி, ஜமீலா, மேரி கிரேஸ், சாந்தி, விஜயராணி, ஜெயபார்வதி, முருகேஸ்வரி, ஓவிய ஆசிரியர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் போதை விழிப்புணர்வு பேச்சுப்போட்டி நடந்தது. இதில் பங்கேற்றவர்களில் 7-ம் வகுப்பு மாணவர்களான சுதர்சன் முதலிடத்தையும், இசை ராஜேஷ் 2-வது இடத்தையும், 8-ம் வகுப்பு மாணவர் வெங்கடேஷ் 3-வது இடத்தையும் பிடித்தனர். இவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இந்த மாணவர்கள் தூத்துக்குடியில் மாவட்ட அளவில் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் முன்னிலையில் இன்று நடைபெறும் பேச்சுபோட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

Tags:    

Similar News