உள்ளூர் செய்திகள்

 சேலம் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர், புறநகர் டி.எஸ்.பி., தையல்நாயகி ஆகியோர் மல்லூர் புறவழிச்சாலையில் ஆய்வு மேற்கொண்ட காட்சி. அருகில் பேரூராட்சி துணை தலைவர் வேங்கை எம்.அய்யனார் உள்ளார். 

பேரூராட்சி தலைவர் புகார் எதிரொலி மல்லூர் வழியாக பஸ்களை திருப்பி விட்ட அதிகாரிகள்

Published On 2022-07-05 09:37 GMT   |   Update On 2022-07-05 09:37 GMT
  • மல்லூர் ஊருக்குள் வராமல், நெடுஞ்சாலையில் பஸ்கள் செல்வதால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
  • மல்லூர் டவுன் பஞ்சாயத்து தலைவர் லதா மற்றும் துணைத்தலைவர் அய்யனார் ஆகியோர், வட்டார போக்குவரத்து அலுவலரிடம் புகார் தெரிவித்தனர்.

சேலம்:

சேலம்-நாமக்கல் நெடுஞ்சாலையில், மல்லூர் டவுன் பஞ்சாயத்து உள்ளது. இந்த வழித்தடத்தில், தினசரி 400க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது.சுற்று வட்டாரத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள், மல்லூர் வந்து, பஸ் மூலம் வெளியிடங்களுக்கு செல்கின்றனர்.

மல்லூர் ஊருக்குள் வராமல், நெடுஞ்சாலையில் பஸ்கள் செல்வதால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இது குறித்து, மல்லூர் டவுன் பஞ்சாயத்து தலைவர் லதா மற்றும் துணைத்தலைவர் அய்யனார் ஆகியோர், வட்டார போக்குவரத்து அலுவலரிடம் புகார் தெரிவித்தனர்.இந்த நிலையில் நேற்று மாலை சேலம் தெற்கு வட்டார போக்கு வரத்து அலுவலர் சந்திர சேகர், புறநகர் டி.எஸ்.பி., தையல்நாயகி ஆகியோர் மல்லூர் புற வழிச்சாலையில் ஆய்வு மேற்கொண்டனர். தொட ர்ந்து மல்லூர் ஊருக்குள் வராமல் நெடுஞ்சாலையில் செல்ல முயன்ற 20-க்கு மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்களை நிறுத்தி ஊருக்குள் திருப்பி விட்டனர்.

மேலும் மல்லூர் வழியாக பஸ்களை இயக்கும்படி, டிரைவர், கண்டக்டர்களை அறிவுறுத்தினர். மல்லூர் புறவழிச்சாலையில் விபத்தை தடுக்க, மாற்று பாதை அமைத்தல் குறித்தும் ஆய்வு செய்தனர். அப்போது டவுன் பஞ்சாயத்து துணைத்தலைவர் வேங்கை எம்.அய்யனார் உடனிருந்தார்.

Tags:    

Similar News