உள்ளூர் செய்திகள்
- முட்டை விலை நிா்ணயம் குறித்து பண்ணையாளர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன.
- முட்டை விற்பனை சீராக இருப்பதாலும் எவ்வித மாற்றமும் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டது.
நாமக்கல்:
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் மருத்துவர் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. முட்டை விலை நிா்ணயம் குறித்து பண்ணையாளர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன.
பிற மண்டலங்களில் விலையில் மாற்றம் செய்யப்படாததாலும், முட்டை விற்பனை சீராக இருப்பதாலும் எவ்வித மாற்றமும் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து முட்டை விலையில் மாற்றம் செய்யாமல் ரூ.5.50-ல் நீடிப்பதாக அறிவிக்கப்பட்டது.
பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ.120-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ.117-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டது.