உள்ளூர் செய்திகள்

நிதி நிறுவன பூட்டை உடைத்து ரூ.1¼ லட்சம் கொள்ளை

Published On 2023-09-19 09:50 GMT   |   Update On 2023-09-19 09:50 GMT
  • நிதி நிறுவனத்தின் கதவை உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு உரிமையாளர் அதிர்ச்சி அடந்தார்.
  • ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் கொள்ளையடிக்கபட்டது தெரிய வந்தது.

அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் சுற்று ப்பகுதிகளில் அதிக அள வில் நிதி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. பெரும்பாலான நிறுவன ங்கள் காலை 9 மணிக்கு திறக்கப்படுகிறது.

இதை யடுத்து மதியம் 2 மணிக்கு உணவு இடை வேளைக்காக அடைக்கப்பட்டு மீண்டும் மதியம் 3 மணிக்கு திறப்பது வழ க்கம். ஒரு சில நிறுவனங்கள் கதவு மட்டும் அடைக்கப்படு வது வழக்கம்.

நிறுவனங்கள் காலையில் பணம் வசூல் செய்யப்பட்டு அந்த பணம் நிறுவனங்களில் உரிமையாளர்கள் அப்படியே வைத்து விட்டு உணவு இடைவேளைக்காக வீட்டிற்கு சென்று விடுகின்றார்கள்.

இதை மர்ம கும்பல் நோட்டமிட்டு வரு கிறார்கள். இதனை பயன்படுத்தி கொள்ளையர்கள் முன் கதவை கம்பியால் பெயர்த்து உள்ளே சென்று அங்கு வைக்கப்பட்டிருக்கும் தொகையினை திருடி செல்வதாக அவர்கள் புகார் கூறி வருகிார்கள்.

இந்த நிலையில் அந்தியூர் தவிட்டுப்பாளையம் பகுதியில் ஒரு நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தை உரிமையாளர் மற்றும் பணியாளர்கள் கடந்த 2 தினங்களுக்கு முன்பு மதியம் பூட்டி விட்டு சென்றனர்.

இதையடுத்து அவர்கள் மதியம் 3 மணி அளவில் வந்து பார்த்தனர். அப்போது அந்த நிறுவனத்தின் முன் கதவை உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு உரிமையாளர் மற்றும் பணியாளர்கள் அதிர்ச்சி அடந்தார்.

இதையடுத்து அவர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு வைக்கப்பட்டு இருந்த ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் கொள்ளையடிக்கபட்டது தெரிய வந்தது.

இது குறித்து நிதி நிறுவனத்தின் உரிமையாளர் ஜெயராமன் அந்தியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் சப்- இன்ஸ்பெ க்டர் கார்த்தி மற்றும் போலீசார் அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளி களை தேடி வருகின்றார்கள.

அதே போல் கடந்த 1 மாதத்திற்கு முன்பு அந்தியூர் பவானி ரோட்டில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் மதிய உணவுக்கு சென்ற சமயத்தில் கொள்ளையர்கள் அந்த நிறுவனத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.

இதையடுத்து அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.20 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றர்கள். இது குறித்து புகார் அளிக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அந்தியூர் பகுதியில் மதியம் நேரத்தில் கடையை பூட்டி விட்டு செல்லும் நேரத்தில் மர்ம ஆசாமிகள் இதை நோட்டமிட்டு தொடர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதனால் அந்த பகுதி நிறு வனங்கள் மற்றும் கடை காரர்கள் இந்த திருட்டு சம்பவத்தால் ஒரு வித அச்சத்தோடு இருந்து வருகிறார்கள்.

எனவே அந்தியூர் பகுதி யில் ரோந்து பணியை தீவிரப்படுத்தி போலீசார் கண்காணிக்க வேண்டும் என வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News