- வேனில் 900 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது.
- போலீசார் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
ஈரோடு:
குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு காவல் துறை தலைவர் காமினி உத்தரவின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி வழிகாட்டுதல் படி டி.எஸ்.பி. சுரேஷ்குமார் மேற்பார்வையில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்பு லனாய்வு பிரிவு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பர்கூர் மலை, தட்டக்கரை பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படு வதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையில் போலீசார் தட்டக்கரை பஸ் நிறுத்தம் பகுதியில் ரகசியமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்துக்கிடமாக அங்கு வந்த வேனை தடுத்து நிறுத்தி சோதனை யிட்டனர். அப்போது வேனில் 50 கிலோ அளவில் 18 மூட்டைகளில் 900 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது.
விசாரணையில் அவர்கள் பவானி, திருவ ள்ளுவர் நகரை சேர்ந்த பாலு (50), உதயகுமார் (55) என்பது தெரியவந்தது. இவர்கள் ரேஷன் அரிசியை கர்நாடகா வுக்கு கடத்தி சென்றது விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் போலீசார் ேரஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேனை பறிமுதல் செய்தனர். பின்னர் பாலு, உதயகுமார் ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.