- 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து அவரது பட்டியில் இருந்த ஆடுகளை பிடித்து சென்றனர்.
- வரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆடு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்களையும் கைது செய்தனர்.
நம்பியூர்:
நம்பியூர் அருகே உள்ள மலையபாளையம் ஏரிக்காட்டு பள்ளத்தை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (வயது 52). இவர் தனது வீட்டின் அருகே ஆடுகளை மேய்த்து விட்டு திரும்பவும் தனது வீட்டில் கொண்டு வந்து ஆடுகளை கட்டி வைத்துள்ளார்.
அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து அவரது பட்டியில் இருந்த ஆடுகளை பிடித்து சென்றனர்.
அதனைத் தொடர்ந்து பொன்னுச்சாமி மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆடு திருட்டில் ஈடுபட்ட வாலிபர்களை பின் தொடர்ந்து சென்றனர்.
அப்போது திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட தட்டாங்குட்டை பகுதியில் கணேஷ் என்பவ ரது கறி கடையில் ஆடுகளை விட்டு சென்றுள்ளனர்.
ஆடுகளை பார்த்து அடையாளம் தெரிந்து கொண்ட பொன்னு ச்சாமி கடைக்கா ரரிடம் இது எனது ஆடு என கூறியுள்ளார். கடைக்காரர் ஆட்டை 2 பேர் விட்டு சென்று ள்ளனர் என கூறினார்.
இது சம்பந்தமாக பெருமா நல்லூர் போலீஸ் நிலையத்தில் பொன்னு ச்சாமி புகார் அளித்தார். அதன் அடிப்ப டையில் போலீசார் ஆடுகளை விட்டு சென்ற 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தொரவலூர் பகுதியை சேர்ந்த மாணிக்கராஜ் (வயது 27), மணிகண்டன் (வயது 30) என தெரிய வந்தது.
அதனை தொடர்ந்து திருட்டு சம்பவம் ஈரோடு மாவட்டம் வரப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நடை பெற்றதால் வரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆடு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்களையும் கைது செய்து கோபிசெட்டி பாளையம் 2-வது நீதிமன்ற த்தில் ஆஜர்படுத்தி சிறை யில் அடைத்தனர்.