செல்போன் திருடிய 2 வட மாநில வாலிபர்கள் கைது
- செல்போனை மர்ம நபர்கள் திருடி சென்றவிட்டனர்.
- 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஈரோடு:
திருச்சி மாவட்டம் தொட்டி யம் சின்னபள்ளி பாளை யத்தை சேர்ந்தவர் கவின் (22). இவர் சம்பவத்தன்று சென்னையில் இருந்து திருப்பூர் செல்லும் சேரன் அதிவிரைவு ரெயிலில் பொது பெட்டியில் பயணித்துள்ளார்.
ஈரோடு ரெயில் நிலைய த்திற்கு வந்தபோது அவரது செல்போனை மர்ம நபர்கள் திருடி சென்றவிட்டனர். இது குறித்து கவின் ஈரோடு ரெயில் நிலையத்தில் புகார் அளித்தி ருந்தார்.
அதன் பேரில் ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து செல்போன் திருடிய மர்ம நபர்களை குறித்து சி.சி.டி.வி. கேமிரா காட்சிகள் கைப்பற்றி அவர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் கவினின் செல்போன் திருடியது உத்தரப்பிரதேசம் மாநிலம் பதோகி மாவட்டம் கேட்டல்பர் பகுதியை சேர்ந்த ப்ரடும் பட்டேல் (25), பீகார் மாநிலத்தை சேர்ந்த சசுதீன் ஆலம் (21) ஆகிய 2 பேர் என்பது உறுதி செய்யப்பட்டது.
இதை யடுத்து ஈரோடு ரெயி ல்வே போலீசார் 2 பேரையும் பிடி த்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் கவின் செல்போன் திருடியதை ஒப்புக்கொண்டனர்.
மேலும் அவர்கள் ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் திருடிய 8 ஸ்மார்ட் போன்க ளையும் மீட்டு 2 பேரையும் போலீசார் கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.