உள்ளூர் செய்திகள்

பெங்களூரில் இருந்து வந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ஈரோடு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரக்கிடங்கில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் இறக்கி வைக்கப்பட்ட போது எடுத்த படம்.

2400 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டது

Published On 2023-06-24 09:38 GMT   |   Update On 2023-06-24 09:38 GMT
  • ஈரோடு பாராளுமன்ற தொகுதி தேர்தலுக்காக 2,400 வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
  • பலத்த பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டுவரப்பட்டு பாதுகாப்பாக இறக்கி வைக்கப்பட்டது.

ஈரோடு:

பாராளுமன்ற தேர்தல் அடுத்த வருடம் நடைபெற உள்ளது. இதையொட்டி அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக பாராளுமன்றத் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த தொகுதிக்கு அனுப்பும் பணி தீவிரப் படுத்தப்பட்டு வருகிறது.

இதன்படி பாராளுமன்ற தேர்தலையொட்டி இன்று கர்நாடக மாநிலம் பெங்களூர் பெல் நிறுவனத்தில் இருந்து 2,400 வாக்குப்பதிவு எந்திரங்கள் வேனில் கொண்டு வரப்பட்டது.

இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் ஆர்.டி.ஓ. அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திர குடோனில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் சீல்கள் கலைக்கப்பட்டு உள்ளே கொண்டு அடுக்கி வைக்கப்பட்டன.

இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:

அடுத்த வருடம் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து ஏற்பாடுகளும் தீவிர படுத்தப்பட்டுள்ளன. அதன்படி இன்று கர்நாடக மாநிலம் பெங்களூர் பெல் நிறுவனத்தில் இருந்து ஈரோடு பாராளுமன்ற தொகுதி தேர்தலுக்காக 2,400 வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இதில் 1400 பேலட் எந்திரங்களும், 1000 கட்டுப்பாட்டு கருவி எந்திரங்களும் அடங்கும். இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் தான் ஈரோடு பாராளுமன்ற தொகுதி தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ளது என்றனர்.

முன்னதாக பலத்த பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டுவரப்பட்டு பாதுகாப்பாக இறக்கி வைக்கப்பட்டது.

Tags:    

Similar News