- கருங்கல்பா ளையம் காமாட்சி அம்மன் கோவில் அருகே பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு கருங்கல் பாளையம் இன்ஸ்பெக்டர் ராஜபிரபு மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது கருங்கல்பா ளையம் காமாட்சி அம்மன் கோவில் அருகே பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போது ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது தெரிய வந்தது. போலீசை பார்த்ததும் அந்த கும்பல் தப்பி ஓட முயன்றது. அந்த கும்பலை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கிருபாகரன் (36) சந்திரன் (40), ரமேஷ் (46), தயாநிதி (45), செந்தில் குமார்(45), சிவா (40) எனவும் இவர்கள் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது தெரிய வந்தது.
இவர்களிடமிருந்து சீட்டு கட்டுகள், ரூ. 22 ஆயிரத்து 900, 5 மோட்டார் சைக்கிள்கள், 7 செ ல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனர்.