உள்ளூர் செய்திகள்

பர்கூர் சாலையில் பழுதாகி நின்ற லாரியால் இருபகுதியிலும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணி வகுத்து நின்றன.

சாலையின் நடுவே பழுதாகி நின்ற லாரியால் போக்குவரத்து பாதிப்பு

Published On 2023-05-08 10:06 GMT   |   Update On 2023-05-08 10:06 GMT
  • தாமரை கரைக்கும்-வரட்டுப்பள்ளம் இடைப்பட்ட சாலையில் நடுவே லாரி பழுதாகி நின்றது.
  • இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

அந்தியூர்:

அந்தியூர் பர்கூர் சாலை வழியாக கர்நாடக மாநிலத்திற்கு செல்லக்கூ டிய பிரதான சாலை உள்ளது.

இந்த சாலை வழியாக சென்றால் கர்நா டக மாநிலத்திற்கு குறைந்த தூரம் என்பதாலும், திம்பம் மலைப்பாதை வழியாக சென்றால் 27 கொண்டை ஊசி வளைவுகள் கடந்து செல்ல வேண்டும்.

ஆனால் அந்தியூர் பர்கூர் மலைப்பாதை வழியாக சென்றால் 2 வளைவுகள் மட்டுமே உள்ளது.

தற்போது சாலைகள் விரி வாக்கம் செய்யப்பட்டு ள்ளதால் வாகன ஓட்டிகள் அதிக அளவில் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை 7 மணி அளவில் பெருந்துறையில் இருந்து அந்தியூர் வழியாக கர்நாடக மாநிலத்திற்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது தாமரை கரைக்கும்-வரட்டு ப்பள்ளம் ேசாதனை சாவடி க்கும் இடைப்பட்ட சாலை யில் நடுவே லாரி பழுதாகி நின்றது.

இதனால் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் இருபுறங்களி லும் நீண்ட வரிசையில் காத்திருந்தன.

இதனையடுத்து லாரி யில் வந்த நபர்களே சாலை யின் ஓரப்பகுதியில் உள்ள கற்களை அகற்றி வாகன ங்கள் போகும் வகையில் சரி செய்து கொடுத்தனர்.

இதனை அறிந்த பர்கூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடனடி யாக போக்குவரத்தை சீர் செய்தனர். இதனால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News