உள்ளூர் செய்திகள்

வேளாண்மை கிராமியக் கலை நிகழ்ச்சி

Published On 2023-03-15 07:49 GMT   |   Update On 2023-03-15 07:49 GMT
  • பொலவக்காளிபாளையம் கிராமத்தில் வேளாண்மை கிராமியக் கலைநிகழ்ச்சி நடை பெற்றது.
  • விவசாயிகளும் வேளாண் துறை சார்ந்த அனைத்து விவரங்களையும் பெற்று பயனடைவார்கள்.

கோபி:

கோபி செட்டிபாளையம் வட்டாரத்தில் வேளா ண்மை உழவர் நலத்துறை மூலம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் பொலவக்காளி பாளையம் கிராமத்தில் வேளாண்மை கிராமியக் கலைநிகழ்ச்சி நடை பெற்றது.

இந்நிகழ்ச்சியை கோபி செட்டிபாளையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் முரளி தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசினார்.

அப்போது வேளாண்மை துறை சார்ந்த திட்டங்கள், வேளாண் இடு பொருட்கள், வேளாண் உபகரணங்களின் மானிய விவரங்கள் மற்றும் பல நவீன சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்த செய்திகளை தெருமுனை கிராமியக் கலை நிகழ்ச்சிகள் மூலம் அனைத்து விவசாயிகள், பொதுமக்களுக்கு தெரிய படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

இதனால் கிராமங்களில் உள்ள அனைத்து விவசாயிகளும் வேளாண் துறை சார்ந்த அனைத்து விவரங்களையும் பெற்று பயனடைவார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News