வரட்டுபள்ளம் அணையில் செத்து மிதந்த மீன்கள்
- வரட்டுபள்ளம் அணையில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடப்படும்.
- ஆனால் வரட்டுபள்ளம் அணையில் அதிக அளவில் மீன் குஞ்சுகள் விடப்படு வதாக பாசன விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
அந்தியூர்:
அந்தியூர் அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை பகுதி யான பர்கூர் மலையின் அடிவார பகுதியில் அமைந்துள்ளது வரட்டு பள்ளம் அணை.
இந்த அணையில் மழைக் காலங்களில் மலைப்பகு திகளில் பெய்யும் மழை நீர் தேக்கி வைக்கப்பட்டு கோடை காலங்களில் வன விலங்குகளின் தாகம் தீர்க்கவும், பாசனத்துக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் இந்த அணையில் மீன்கள் வளர்க்கப்பட்டு அதனை மீன்வளத்துறை மூலம் டெண்டர் விடப்பட்டு மீன்கள் பிடிக்க படுகின்றது. அந்த வகையில் வரட்டுபள்ளம் அணையில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடப்படும். அதில் ஒரு சில மீன்கள் இறந்து விடுகின்றது. மீதம் உள்ள மீன்கள் இனப்பெ ருக்கம் அடைகின்றது.
ஆனால் வரட்டுபள்ளம் அணையில் அதிக அளவில் மீன் குஞ்சுகள் விடப்படு வதாக பாசன விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால் அவ்வப்போது மீன்கள் இறந்து அணையின் ஓரப்பகுதியில் செத்து மிதக்கிறது எனவும், இந்த அணையில் இருந்து எண்ண மங்கலம், வட்டக்காடு, கிருஷ்ணாபுரம், குருநாத புரம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் தேவைக்காக தண்ணீர் செல்வதாகவும் கூறப்படுகின்றது.
ஆகவே பொதுப்பணி துறையும், மீன்வளத்துறையும் இதனை நேரில் ஆய்வு செய்து இனிவரும் காலங்களில் அணைக்கு எவ்வளவு மீன் குஞ்சுகள் விட வேண்டுமோ அவற்றை உரிய முறையில் விட்டு மீன்கள் இறப்பதை தவிர்க்க வேண்டும் என்று பாசன விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.