உள்ளூர் செய்திகள்

தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு

Published On 2022-06-07 09:48 GMT   |   Update On 2022-06-07 09:48 GMT
  • ஈரோடு கிழக்கு, மேற்கு, பெருந்துறை ஆகிய வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும் தனியார் பள்ளி வாகனங்களின் ஆய்வு நடந்தது.
  • வாகன சோதனையில் கிழக்கு பகுதியில் 355 வாகனங்களும், மேற்கு பகுதியில் 43 வாகனங்களும், பெருந்துறையில் 463 வாகனங்கள் என மொத்தம் 861 வாகனங்கள் வந்தன.

ஈரோடு:

ஈரோடு கிழக்கு, மேற்கு, பெருந்துறை ஆகிய வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும் தனியார் பள்ளி வாகனங்களின் ஆய்வு இன்று ஈரோடு பெருந்துறை ரோடு, பவளத்தாம்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் நடந்தது.

வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார் தலைமை தாங்கி வாகனங்களை ஆய்வு செய்தார். வாகனங்களில் அவசர வழி சரியாக செயல்படுகிறதா? பாதுகாப்பு உபகரணங்கள் முறையாக உள்ளதா? தீயணைப்பு கருவிகள் உள்ளதா? என பல்வேறு சோதனைகள் செய்தார்.

இந்த வாகன சோதனையில் கிழக்கு பகுதியில் 355 வாகனங்களும், மேற்கு பகுதியில் 43 வாகனங்களும், பெருந்துறையில் 463 வாகனங்கள் என மொத்தம் 861 வாகனங்கள் வந்தன.

மேலும் தீ விபத்து ஏற்பட்டால் அதனை எவ்வாறு அணைப்பது என்பது குறித்து டிரைவர்களுக்கு செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

இதில் வட்டார போக்கு வரத்து அலுவலர்கள் வெங்கட்ரமணி, பதுவை நாதன், சக்திவேல், வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் பாஸ்கர், எம்.சிவகுமார், கதிர்வேல், கே.சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News