- பவானி மோட்டார் வாகன ஆய்வாளர் சுகந்தி அந்தியூர் தாலுகாவில் உள்ள தனியார் பள்ளிக்கும் நேரடியாக சென்று ஆய்வு நடத்தினார்.
- ஓட்டுநர்கள் சாலை விதிகளை பின்பற்றியும், வேகத்தை குறைத்தும் வாகனத்தை கட்டுப்பாட்டுடன் இயக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுக்காவில் 15-க்கு மேற்பட்ட தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளை அழைத்து வர பள்ளி நிர்வாகம் வாகனங்களை இயக்கி வருகிறது.
இந்த வாகனங்கள் பள்ளி வாகனங்களுக்கான அரசால் விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை கடைபிடிக்கின்றனவா என கலெக்டரின் உத்தரவுப்படி பவானி மோட்டார் வாகன ஆய்வாளர் சுகந்தி அந்தியூர் தாலுகாவில் உள்ள ஒவ்வொரு தனியார் பள்ளிக்கும் நேரடியாக சென்று ஆய்வு நடத்தினார்.
மேலும் பள்ளி வாகன ஓட்டுனர்களிடம் தனி மனித தவறுகளே வாகன விபத்துக்கு காரணமாக அமைகிறது.
எனவே ஓட்டுநர்கள் சாலை விதிகளை பின்பற்றியும், வேகத்தை குறைத்தும் வாகனத்தை கட்டுப்பாட்டுடன் இயக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது வட்டார கல்வி அலுவலர் மாதேஷா,கல்வி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் உடன் இருந்தனர்.