உள்ளூர் செய்திகள்

வேளாண் அடுக்கு திட்டத்தில் பயன்பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அழைப்பு

Published On 2023-04-04 09:40 GMT   |   Update On 2023-04-04 09:40 GMT
  • வேளாண் அடுக்கு திட்டம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
  • பல்வேறு துறைகளின் திட்டங்களில் நேரடி பலனை பெறலாம்.

ஈரோடு:

ஈரோடு மற்றும் சென்னிமலை வட்டார வேளாண் உதவி இயக்குனர் சாமுவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வேளாண் அடுக்கு திட்டம் தமிழக அரசால் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களில் விவசாயிகள் இணைந்து பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் விவசாயிகள் இணைய கிராம நிர்வாக அலுவலகம், வட்டார வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை அலுவலகத்தை அணுகி, விவசாயிகளின் ஆதார் எண், புகைப்படம், வங்கி கணக்கு எண், நில உரிமை ஆவணங்களுடன் சென்று 'GRAINS' என்ற இணை யத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இத்தளத்தில் விவசாயிகளின் விபரம் இணைக்கப்படுவதால் வேளாண் துறை, பேரிடர் மேலாண்மை, தோட்டக்க லை துறை, கூட்டுறவு, பட்டு வளர்ச்சி, உணவு வழங்கல், வேளாண் பொறியியல் துறை, ஊரக வள்ர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் திட்டங்களில் நேரடி பலனை பெறலாம்.

தவிர நிதி திட்ட பலன்கள் ஆதார் எண் அடிப்படையில் நேரடி பண பரிமாற்றம் மூலம் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவாகும். தகுதியான விவசாயிகள் இத்திட்டத்தில் இணைந்து தொடர்ந்து பலன்களை பெறலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News