உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்

Published On 2023-02-08 09:54 GMT   |   Update On 2023-02-08 09:54 GMT
  • மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் அம்மாபாளையம் தொடக்க பள்ளி வளாகத்தில் நடந்தது.
  • இந்த முகாமில் 122 குழந்தைகள் மற்றும் 92 பெரியவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

 சென்னிமலை:

சென்னிமலை வட்டார வள மையம் சார்பாக முன் தொடக்க நிலை, தொடக்க நிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் சென்னிமலை அடுத்துள்ள அம்மாபாளையம் தொடக்க பள்ளி வளாகத்தில் நடந்தது.

இதில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவ, மாணவி களுக்கு உள்ளடங்கிய கல்வி வசதி செயல் படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் அனைத்து மாற்றுத்திறன் கொண்ட 1 வயது குழந்தை களும், 18 வயதிற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளி களும் பயன்பெறும் வகை யில் மருத்துவ மதிப்பீட்டு முகாம் ஏற்பாடு செய்ய ப்பட்டு பலர் பயன்பெற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் சென்னிமலை வட்டார வள மைய மேற்பார்வையாளர் கோபிநாதன் வரவேற்றார். பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக், பேரூ ராட்சி கவுன்சிலர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்தனர்.

மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலர் கோதைச்செல்வி மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார்.

இந்த முகாமில் 122 குழந்தைகள் மற்றும் 92 பெரியவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Tags:    

Similar News