உள்ளூர் செய்திகள் (District)

ஈரோட்டில் அடுத்தடுத்த சம்பவம்-பெண் உள்பட 3 பேர் தற்கொலை

Published On 2023-07-17 06:57 GMT   |   Update On 2023-07-17 06:57 GMT
  • ஈரோட்டில் அடுத்தடுத்த சம்பவத்தில் பெண் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்
  • போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

ஈரோடு,

சத்தியமங்கலம் திருநகர் காலனியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் ஈசக். இவரது மனைவி விஜயா. இவர்களுக்கு லாரன்ஸ் (வயது 24) என்ற மகன் உள்ளார். லாரன்ஸ் செல்போன் கடைக்கு வேலை சென்று வந்ததா கவும், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வேலையில் இருந்து நின்று விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலை யில் சம்பவத்தன்று லாரன்ஸ் தனது சொந்த வீட்டில் தூக்கு போட்டு கொண்டார். இதை பார்த்த விஜயா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் லாரன்சை ஆம்புலன்ஸ் மூலம் சத்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த் டாக்டர்கள் லாரன்ஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் இதுகுறித்து விஜயா சத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் லாரன்ஸ் காதல் தோல்வி விரக்தியால் தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் அரசலூர் புதுகாலனி பகுதியை சேர்ந்தவர் காமாட்சி (45). இவருக்கு நிவேதா (22) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காமாட்சியின் 2-வது தம்பி முத்துவுக்கும், நிவேதாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை. மேலும் நிவேதாவுக்கு அடிக்கடி வயிற்று வலியும் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் குழந்தை இல்லா வருத்தத்தில் இருந்த நிவேதா விட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை குடித்து விட்டார். பின்னர் உறவினர்கள் நிவேதாவை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நிவேதா உயிரிழந்தார். பின்னர் இதுகுறித்து காமாட்சி அரசலூர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் படி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கோபி கொங்க ர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சதீஸ்குமார் (37). இவரது மனைவி ெஜயந்தி. சதீஸ்குமார் கோபியில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கடன் வாங்கி சொந்தமாக ஒரு வீடு கட்டியுள்ளார். பின்னர் வாங்கிய கடன்களை இவரால் கட்ட முடி யவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சதீஸ்குமார் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை குடித்து விட்டார். பின்னர் அக்கம் பக்கத்தினர் சதீஸ்குமாரை கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சதீஸ்குமார் உயிரிழந்தார். பின்னர் இதுகுறித்து ெஜயந்தி பங்களாபுதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News