உள்ளூர் செய்திகள்

வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் களப்பணியாளர்களுக்கு பண்ணாரியில் பயிற்சி அளிக்கப்பட்டது.

மழைக்கு முந்தைய வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி

Published On 2023-06-09 09:06 GMT   |   Update On 2023-06-09 09:06 GMT
  • களப்பணியாளர்களுக்கு வன உயிரியலாளர் சக்தி வேல், வனவர் தீபக்குமார் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
  • பாதுகாப்பினை கருத்தில் கொண்டு துப்பா க்கியினை கட்டாயம்எடுத்து செல்ல வேண்டும்.

சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மழைக்கு முந்தைய வன விலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் வருகிற 12-ந் தேதி முதல் தொடங்குகிறது. மேலும் தானியங்கி கேமிராக்களை கொண்டு புலிகள் கணக்கெடுப்பு பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது.

அதன்படி 12-ந் தேதி பெரிய தாவர உண்ணிகள் மற்றும் மாமிச உண்ணிகளின் தடயங்கள் கணக்கீடு செய்யப்படுகிறது. 13-ந் தேதி நேர்கோட்டு பாதையில் கணக்கெடுப்பு பணி (காலை மற்றும் மாலை) நடக்கிறது.

14-ந் தேதி பெரிய தாவர உண்ணிகள் மற்றும் மாமிச உண்ணிகளின் தடயங்கள் கணக்கீடு செய்யப்படுகிறது. 15-ந் தேதி நேர்கோட்டு பாதை கணக்கெடுப்பு பணியும்,

16-ந் தேதி பெரிய தாவர உண்ணிகள் மற்றும் மாமிச உண்ணிகளின் தடயங்களும், 17-ந் தேதி நேர்கோட்டு பாதை கணக்கெடுப்பு பணியும் நடக்கிறது.

தொடர்ந்து 22-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை தானியங்கி கேமிரா பொருத்தும் பணிகள் நடக்கிறது. 27-ந் தேதி முதல் தானியங்கி கேமிரா கண்காணிக்கும் பணி நடக்கிறது.

28-ந் தேதி முதல் அடுத்த மாதம் 1-ந் தேதி வரை தானியங்கி கேமிரா அகற்றும் பணிகளும், 2-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை புகைப்பட கருவிகளை கொண்டு செல்லுதலும் நடக்கிறது. தொடர்ந்து போட்டோ தரவுகளை சேகரிக்கும் பணிகள் நடக்கிறது.

இந்த நிலையில் வனவி லங்குகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் களப்பணியாளர்களுக்கு வன உயிரியலாளர் சக்தி வேல், வனவர் தீபக்குமார் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

அப்போது அவர்களுக்கு பல்ேவறு ஆலோசனைகளை வழங்கினர். வன உயிரின கணக்கெ டுப்பு பணியின் போது களப்பணியாளர்கள் தங்கள் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு துப்பா க்கியினை கட்டாயம்எடுத்து செல்ல வேண்டும். களப்பணியாளர்கள் அவரவர்களுக்கு உரிய சீருடையில் களப்பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

வன உயிரினக் கணக்கெடுப்பு பணியின் போது ஓய்வு எடுக்கும் இடம், உணவு அருந்த அமரும் இடம் பாதுகா ப்பானதாக இருக்கின்றதா? என்பதனை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.

அதாவது நான்கு திசைக ளில் வன உயிரினங்கள் வந்தால் எளி தில் அறிய கூடிய வகையில் நான்கு திசைகளிலும் பார்க்ககூடிய வண்ணம் பாதுகாப்பினை உறுதி படுத்தி களப்ப ணியாளர்கள் அமரவே ண்டும்.

வன உயிரின கணக்கெடு ப்பு பணியின் போது செல்போன்களை பயன்படு த்திக் கொண்டு நடந்து செல்வதை தவிர்க்க வேண்டும்.

ஏனெனில் வன விலங்குகள் அருகில் இருந்தால் அதனை நம்மால் உணர இயலாமல், பாதுகா ப்பற்ற சூழ்நிலைகள் உருவாக்ககூடும் என்பது உள்பட ஏராளமான ஆலோசனைகளை வழங்கினர்.

Tags:    

Similar News