உள்ளூர் செய்திகள்

ரூ.17 லட்சத்துக்கு நாட்டுச்சர்க்கரை கொள்முதல்

Published On 2023-05-25 09:05 GMT   |   Update On 2023-05-25 09:05 GMT
  • விவசாயிகள் 895 மூட்டைகள் நாட்டுச்சர்க்கரையை கொண்டு வந்திருந்தனர்.
  • விற்பனை மதிப்பு ரூ.17 லட்சத்து 19 ஆயிரத்து 410 ஆகும்.

ஈரோடு:

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பிரசாதங்கள் தயாரிக்க ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை

விற்பனைக்கூடத்தில் இருந்து கரும்புச்சர்க்கரை எனப்படும் நாட்டுச்சர்க்கரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி ஏலத்தில் பங்கேற்க சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 895 மூட்டைகள் நாட்டுச்ச ர்க்கரையை கொண்டு வந்திருந்தனர்.

இதில் 60 கிலோ எடையிலான மூட்டை முதல் தரம் குறைந்தபட்ச விலை யாக ரூ.2,730-க்கும், அதிகபட்சமாக ரூ.2,740- க்கும் விற்பனை யானது.

2-ம் தரம் குறைந்த பட்சமாக கிலோ ரூ.2,590-க்கும், அதிகபட்சமாக ரூ.2,650- க்கும் விற்பனை யானது.

இதில் 38 ஆயிரத்து 820 கிலோ எடையிலான 647 நாட்டுச்சர்க்கரை மூட்டை கள் விற்பனை யாகின. இதன் விற்பனை மதிப்பு ரூ.17 லட்சத்து 19 ஆயிரத்து 410 ஆகும் என விற்பனை க்கூட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News