உள்ளூர் செய்திகள்

அரசு ஐ.டி.ஐ.யில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

Published On 2023-05-26 09:26 GMT   |   Update On 2023-05-26 09:26 GMT
  • ஈரோடு மற்றும் கோபி அரசு ஐ.டி.ஐ.யில் புதிய தொழில் பிரிவுகளில் பயிற்சி பெறலாம்.
  • ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தகவல்.

ஈரோடு:

ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஈரோடு மற்றும் கோபி அரசு ஐ.டி.ஐ.யில் எலக்ட்ரீஷியன், பிட்டர், மெசினிஸ்ட், டர்னர், ஒயர்மேன், வெல்டர், டெக்ஸ்டைல்ஸ், மெக்கானிக்கல் மோட்டார் வைக்கிள், ஏ.சி.மெக்கானிக் ஆகிய என்ஜினீயரிங் பாடப்பிரிவும்,

என்ஜினீயரிங் அல்லாத கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர், கட்டிட பட வரைவாளர் தொழில் பிரிவுகள், இண்டஸ்டரி 4.0 திட்டத்தின் கீழ் அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய புதிய தொழில் பிரிவுகளில் பயிற்சி பெறலாம்.

பயிற்சி பெற 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மற்றும் தோல்வி அடைந்தவர்கள் அரசு ஐ.டி.ஐ.யை நேரில் அணுகலாம்.

பயிற்சி பெறுவோருக்கு மாதம் 750 ரூபாய் உதவித்தொகை, லேப்டாப், சைக்கிள், சீருடை, பாடப்புத்தகம், காலணி, பஸ் பாஸ் இலவசமாக வழங்கப்படும்.

அரசு பள்ளிகளில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை படித்த பெண் பயிற்சியாளர்களுக்கு புதுமை பெண் திட்டத்தில் மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும்.

பயிற்சி வகுப்புடன் 2 ஆண்டு ஐ.டி.ஐ. பயிற்சி மற்றும் 10-ம் வகுப்புடன் 2 ஆண்டு ஐ.டி.ஐ. பயிற்சி முடித்தவர்களுக்கு பள்ளி கல்வித்துறை மூலம் முறையே 10-ம் வகுப்பு, பிளஸ்-2 வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பயிற்சியின் போது பிரபல தொழில் நிறுவனங்களில் இன்டர்ன்சி பயிற்சி உதவித்தொ கையுடன் வழங்கப்படும். பிரபல தொழில் நிறுவ னங்கள், மத்திய, மாநில அரசு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்யப்படும்.

ஆன்லைனில் விண்ணப்ப பதிவு கட்டணம் 50 ரூபாய் செலுத்த ஏ.டி.எம். கார்டு, போன் பே, ஜி பே வசதியுடன் வரலாம். ஆவணங்கள் கொண்டு வர வேண்டும்.

வரும் ஜூன் மாதம் 7-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு ஈரோடு அரசு ஐ.டி.ஐ.யை 0424 2275244, 0424 2270044 என்ற எண்களில் தொடர்பு கொண்டு அறியலாம்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News