உள்ளூர் செய்திகள்

காப்புக்காடு பகுதியில் `திடீர்' தீ

Published On 2023-02-11 09:16 GMT   |   Update On 2023-02-11 09:16 GMT
  • கணுவாய் அருகே காப்புக்காடு பகுதியில் வறண்டு கிடந்த செடி, கொடிகளில் திடீரென தீ பிடித்தது.
  • தீயணைப்பு வாகனம் செல்ல சரியான பாதை இல்லாததால் இலை, தழைகளை பயன்படுத்தி தீயை அணைத்தனர்.

சென்னிமலை:

சென்னிமலை-காங்கேயம் ரோட்டில் உள்ள கணுவாய் அருகே வனப்பகுதியை ஒட்டிய காப்புக்காடு பகுதியில் வறண்டு கிடந்த செடி, கொடிகளில் திடீரென தீ பிடித்தது.

இது பற்றிய தகவல் கிடைத்ததும் சென்னிமலை தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

ஆனால் தீப்பிடித்த பகுதிக்கு தீயணைப்பு வாகனம் செல்ல சரியான பாதை இல்லாததால் தீயணைப்பு வீரர்கள் நடந்து சென்று இலை, தழைகளை பயன்படுத்தி சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

அந்த பகுதியில் யாரோ பீடி, சிகரெட்டை பற்ற வைத்துவிட்டு வீசிய நெருப்பால் வறண்டு கிடந்த செடி, கொடிகளில் தீ பிடித்திருக்கலாம் என கூறப்படுகிறது.

Tags:    

Similar News