உள்ளூர் செய்திகள்

ஈரோட்டில் தபால் நிலையத்திற்கு பூட்டு போடும் போராட்டத்திற்கு வந்த காங்கிரஸ் கட்சியினர் கண்டன கோஷமிட்ட போது எடுத்த படம்.

ஈரோட்டில் தபால் நிலையத்திற்கு பூட்டு போட சென்ற காங்கிரஸ் கட்சியினரால் பரபரப்பு

Published On 2023-04-21 09:57 GMT   |   Update On 2023-04-21 09:57 GMT
  • ஊர்வலமாக கையில் பூட்டுடன் காங்கிரசார் சென்றனர்.
  • சூரம்பட்டி போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

ஈரோடு:

ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனை கண்டித்து இந்திய அளவில் காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டிலும் காங்கிரசார் பல்வேறு கட்ட போராட்ட ங்களை முன்னெடுத்து நடத்தி வருகின்றனர். இதன்படி ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஏற்கனவே பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்நிலை யில் மேற்கண்ட கோரிக்கை யை வலியுறுத்தி ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் சூரம்பட்டியில் உள்ள தபால் நிலையத்தை பூட்டு போடும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்கு போலீசார் அனுமதி மறுத்து இருந்தனர். தடையை மீறி போராட்டம் நடைபெற்றால் கைது செய்யவும் நடவடிக்கைக்கு தயாராக இருந்தனர்.

இந்நிலையில் இன்று காலை எஸ்.கே.சி. ரோட்டில் காங்கிரசார் ஒன்று திரண்டனர். மாநகர பொறு ப்பாளர் திருச்செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் ராஜேஷ் ராஜப்பா முன்னிலை வகித்தார்.

மாநில செயற்குழு உறுப்பி னரும், கவுன்சிலரு மான ஈ.பி.ரவி, மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தில்ராஜா, சிறுபான்மை பிரிவு மாநில துணைத்த லைவர் ஜாவர் அலி,

மாநில ஒருங்கிணைப்பாளர் ஜிப்பர் அகமது, மாவட்ட தலைவர் மாப்பிள்ளை மீரான், மண்டல தலைவர்கள் விஜயபாஸ்கர், ஜாபர் சாதிக், அல்டிமேட் தினேஷ், சிறுபான்மை பிரிவு பாட்ஷா, முகமது யூசுப், கனகராஜ், விஜயலட்சுமி உள்பட கலந்து கொண்டனர்.

பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக சூரம்பட்டி நால்ரோட்டிற்கு கையில் பூட்டுடன் காங்கிரசார் சென்றனர்.

அப்போது சூரம்பட்டி போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி தடையை மீறி பூட்டு போடும் போராட்டம் நடத்தினால் கைது செய்யப்படுவீர்கள் என்று கூறினர்.

இதனால் காங்கிரசார் மேற்கொண்டு செல்லாமல் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து கோஷம் எழுப்பி அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News