உள்ளூர் செய்திகள்

விபத்தில் காயமடைந்த டிரைவர், கிளீனரை சப்-இன்ஸ்பெக்டர் தனபால் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைத்த காட்சி.

லாரி சாலையை விட்டு இறங்கி விபத்து

Published On 2023-03-30 09:17 GMT   |   Update On 2023-03-30 09:17 GMT
  • லாரி சாலையைவிட்டு பக்கவாட்டில் இறங்கி விபத்தானது.
  • விபத்தில் காயமடைந்த டிரைவர், கிளீனர் ஆகிய 2 பேரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைபாதை வழியாக கர்நாடகா மாநிலம் செல்லும் பிரதான சாலை உள்ளது.

இந்த சாலையின் வழியாக சென்றால் கர்நாடகாவிறக்கு மிக குறைந்த தூரம் என்பதால் வாகன ஓட்டிகள் அதிக அளவில் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் சாலைகள் தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டதால் வாகன ஓட்டிகளுக்கு சிரமின்றி செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் இரவு திருச்செங்கோட்டிற்கு கர்நாடக மாநிலத்தில் இருந்து பொருட்கள் ஏற்றி வருவதற்காக லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

லாரியை திருச்செங்கோட்டை சேர்ந்த தமிழரசன் (48) என்பவர் ஓட்டி வந்தார். கிளினராக தனசேகர் என்பவர் இருந்தார்.

அப்போது லாரி தட்டக்கரை பகுதி யில் வந்து கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையைவிட்டு பக்கவாட்டில் இறங்கி விபத்தானது.

இதனையடுத்து பர்கூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் தனபால் விபத்தில் காயமடைந்த டிரைவர் தமிழரசன், கிளீனர் தனசேகர் ஆகிய 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தார்.

மேலும் சாலை அகலமாக விரிவுபடுத்த ப்பட்டு இருப்பதாலும், வாகன ஓட்டிகள் வேகமாக சென்று வளை வுகளில் கட்டுப்பாட்டை இழந்து விபத்தை ஏற்படு த்துவதாக கூறப்படுகிறது.

இந்த மாதத்தில் மட்டும் 3 முறை இதே வழிதடத்தில் விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில் உயிர்சேதம் எதுவும் நடைபெறவில்லை.

Tags:    

Similar News