உள்ளூர் செய்திகள்
வேப்ப மரத்தில் பால் வடிந்ததால் பரபரப்பு
- வெள்ளோட்டில் உள்ள மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா நடைபெற்றது.
- அப்போது இருந்து இந்த வேப்ப மரத்தில் பால் வடிந்து வருகிறது.
சென்னிமலை:
சென்னிமலை அருகே வெள்ளோட்டில் இருந்து பெருந்துறை ஆர்.எஸ். செல்லும் வழியில் உள்ளது சின்னக்குளம்.
இந்த குளக்கரையின் ஏரியில் உள்ள ஒரு வேப்ப மரத்தில் கடந்த சில நாட்களாக பால் வடிந்து வந்தது.
இதனால் வெள்ளோடு மற்றும் சுற்றியுள்ள பகுதி களை சேர்ந்த திரளான பொதுமக்கள் அங்கு சென்று அந்த வேப்ப மரத்திற்கு பூஜைகள் நடத்தி வழிபாடு செய்து வருகின்றனர்.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் கூறும் போது,
கடந்த வாரம் வெள்ளோட்டில் உள்ள மாரியம்மன் கோவி லில் பொங்கல் விழா நடைபெற்றது. அப்போது இருந்து இந்த வேப்ப மரத்தில் பால் வடிந்து வருகிறது.
இந்த மரத்திற்கு சுற்று வட்டார பகுதியில் இருந்து தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து பூஜை செய்து வழிபட்டு வரு கிறார்கள் என்றனர்.