1,200 கிலோ ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது
- கோபிசெட்டிபாளையம் எருமைக்காரபாளையம் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
- காரை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் ரேஷன் அரிசி கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் எருமைக்காரபாளையம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தி விற்பனை செய்யப்படுவதாக ஈரோடு மாவட்ட குடிமை பொருள் குற்றப்புல னாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து இன்ஸ்பெ க்டர் பன்னீர் செல்வம் தலைமையில் அப்பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது அவ்வழி யாக சந்தேகப்படும்படியாக ஆம்னி கார் ஒன்று வந்தது.
காரை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் ரேஷன் அரிசி கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காரை ஓட்டி வந்த நபரிடம் நடத்திய விசாரணையில் அவர், சத்தியமங்கலம் அரியப்பம்பாளையத்தை சேர்ந்த சிவக்குமார் (35) என்பதும், ரேஷன் அரிசியை வடமாநிலத்த வர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய கடத்தி செல்வதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சிவக்குமாரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 1,200 கிலோ ரேஷன் அரிசியும், கடத்த லுக்கு பயன்படு த்தப்பட்ட காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.