உள்ளூர் செய்திகள்

விழாவில் சி.த. செல்லப்பாண்டியன், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய காட்சி.

அ.தி.மு.க.விற்கு அனைவரும் துணை நிற்க வேண்டும்-சி.த.செல்லப்பாண்டியன் பேச்சு

Published On 2023-03-13 07:12 GMT   |   Update On 2023-03-13 07:12 GMT
  • கபடி போட்டியை முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தொடங்கி வைத்தார்.
  • ஏழை, எளியோருக்கு நன்மைகளை செய்ததால் எம்.ஜி.ஆர் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறார் என்று சி.த.செல்லப்பாண்டியன் பேசினார்.

தூத்துக்குடி:

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர 6,7- வது வார்டு பொதுமக்கள் மற்றும் என்.எம்.சி. கபடி குழு சார்பில் கபடி போட்டி, நல திட்ட உதவிகள் வழங்கும் விழா கோவில்பிள்ளைவிளையில் நடைபெற்றது

அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் தலைமை தாங்கி போட்டியை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அப்போது அவர் பேசிய தாவது:-

எம்.ஜி.ஆர் ஏழை, எளிய மக்களுக்கு நன்மைகளை செய்ததின் மூலம் இன்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறார். அவர் வழியில் கட்சியை தலைமையேற்று ராணுவ கட்டுபாட்டுடன் வழிநடத்தி முதல்-அமைச்ச ராக பணியாற்றி எண்ணற்ற திட்டங்களை மக்களுக்காக வழங்கியவர் ஜெயலலிதா. அவரை தொடர்ந்து 3-வது தலை முறையாக முன்னாள் முதல்-அமைச்சரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை வழிநடத்தி செல்கிறார். ஜெய லலிதாவின் கொள்கை களை தாங்கி எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி பணியாற்றி வருகிறார். எதிர்வரும் காலங்களில் அ.தி.மு.க.விற்கு அனைவரும் துணை நிற்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசி னார்.

தொடர்ந்து கபடி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் ெதாகையும், கோப்பைகளும் வழங்கப்பட்டது.

விழாவில் வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ஜீவா பாண்டியன், கிழக்கு ஒன்றிய செயலாளர் பால்ராஜ், மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் சிவசுப்பிரமணியன் (பொறுப்பு), வட்ட செயலா ளர்கள் ராஜா, துரைசிங், அரசு போக்குவரத்து மண்டல இணை செயலாளர் சங்கர், வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் கவுதம் பாண்டியன், வட்ட பிரதிநிதி மணிகண்டன், அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி ஊர்க்காவலன், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்

ஏற்பாடுகளை வட்ட செயலாளர் அம்பைமுருகன், முன்னாள் வட்ட செயலாளர் பாக்கியராஜ், இளைஞர் பாசறை செயலாளர் கோவில்பிள்ளை விளை தெய்வகுமார், வேல்முருகன், பாலமுருகன், வட்ட பிரதிநிதி பிரகாஷ் ராஜ் மற்றும் ஆரோக்கியராஜ், அசோக் ஆகியோர் செய்திருந்தனர்

Tags:    

Similar News