உள்ளூர் செய்திகள்

விளை நிலங்களில் நடமாடி வரும் கரடியை படத்தில் காணலாம்,

செஞ்சி அருகே விளை நிலங்களில் நடமாடி வரும் கரடியால் விவசாயிகள் அச்சம்: கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை ஏற்பாடு

Published On 2023-03-16 08:43 GMT   |   Update On 2023-03-16 08:43 GMT
  • கடந்த ஒரு வாரமாக பகல் நேரத்தில் கரடியின் நடமாட்டத்தை விவசாயிகள் பார்த்தனர்.
  • கரடி ஆடு, கன்றுகளை கடித்து காயப்படுத்தியது,

விழுப்புரம்: 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த முட்டுக்காடு, சிறுவாடி, பாக்கம் காப்புக்காடுகளில் 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு காரைக்காப்பு காட்டில் கரடிகள் இருந்தன. நாளடைவில் கரடிகள் இல்லாமல் போனது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக முட்டுக்காடு வனப்பகுதியில் கோனை ஊராட்சி சோமசமுத்திரம், கோனைபுதூர், வடகால் மற்றும் எம்.ஜி.ஆர் நகர் பகுதிகளில் பகல் நேரத்தில் கரடியின் நடமாட்டத்தை விவசாயிகள் பார்த்தனர்.  இந்த கரடி ஆடு, கன்றுகளை கடித்து காயப்படுத்தியது. நேற்று மாலை கோனைப்புதூர் கிராமத்தில் விவசாய நிலத்தில் கரடி உலா வந்தது.

இதைனை விவசாயிகள் வீடியோவாக பதிவு செய்து சமூக வளைதளங்களில் பதி விட்டனர். இது வைரலாக பரவியது.  இது குறித்து வனத்துறை யை தொடர்பு கொண்ட போது வனச்சரகர் வெங்க டேசன் கூறியதாவது:- செஞ்சி அருகே காட்டிலிருந்து ஊருக்குள் கரடி வந்துள்ளது, இதனை பிடிப்பதற்காக கோனை புதூர் மலை அடிவாரத்தில் கூண்டு வைத்துள்ளோம். இதனை பிடிக்கும் வரை பொதுமக்கள் காட்டுப்ப குதிக்கு தனியாக செல்ல வேண்டாம் என எச்சரிக்கை செய்துள்ளோம். கூண்டில் கரடி சிக்கவில்லை எனில், அடுத்த கட்டமாக மயக்க ஊசி செலுத்தி கரடியை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பல ஆண்டுகளுக்கு பிறகு கரடி ஊருக்குள் வந்தது செஞ்சி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி யுள்ளது.

Tags:    

Similar News