ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம் ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா
- அழகர்நாயக்கன்பட்டியை சேர்ந்த விவசாயிகள் சார்பாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு மனு கொடுத்தார்.
- புளியங்குளத்தில் நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து கலைந்து சென்றனர்.
செம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா சித்தரேவு அருகே உள்ள புளியங்குளத்தின் மொத்த பரப்பளவு சுமார் 60 ஏக்கர் ஆகும். இந்தக் குளத்தை நம்பி 50 கிராம பொதுமக்கள் சுமார் 15 ஆயிரம் ஏக்கரில் விவசாயம் செய்து வருகின்றனர்.
புளியங்குளத்தில் சித்தரேவு மற்றும் நரசிங்கபுரத்தை சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்பு செய்தனர். இதுகுறித்து அழகர்நாயக்கன்பட்டியை சேர்ந்த விவசாயிகள் சார்பாக சன்மகா என்பவர் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு மனு கொடுத்தார்.
அதன்படி சித்தரேவு கிராம நிர்வாக அலுவலர் கணேஷ்குமார், வருவாய் அலுவலர் கணேசன், சர்வேயர் ராமு மற்றும் அதிகாரிகள் புளியங்குளத்தில் சித்தரேவு பகுதி மக்கள் செய்திருந்த ஆக்கிர மிப்புகளை அகற்றினர். ஆனால் நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் செய்யப்பட்டிருந்த ஆக்கிர மிப்புகளை அகற்றவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதனை கண்டித்து அழகர்நாயக்கன்பட்டியை சேர்ந்த விவசாயிகள் ஆத்தூர் தாலுகா அலுவலக நுழைவாயில் பகுதியில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட னர். மேலும் புளியங்கு ளத்தில் நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது