உள்ளூர் செய்திகள்

பொள்ளாச்சியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Published On 2022-07-13 10:40 GMT   |   Update On 2022-07-13 10:40 GMT
  • தேங்காய் விலை சரிவை கட்டுப்படுத்த கோரியும். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தென்னை விவசாயிகள்சார்பில் பொள்ளாச்சியில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  • பல்வேறு காரணங்க ளால் அனைத்து பொருட்களும் விலை உயர்ந்து வருகின்றன. ஆனால், தேங்காய் விலை மட்டும் தொடர்ந்து சரிந்து வருகிறது

பொள்ளாச்சி :

தேங்காய் விலை சரிவை கட்டுப்படுத்த கோரியும். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தென்னை விவசாயிகள்சார்பில் பொள்ளாச்சியில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் 2000க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதாவது:-

பல்வேறு காரணங்க ளால் அனைத்து பொருட்களும் விலை உயர்ந்து வருகின்றன. ஆனால், தேங்காய் விலை மட்டும் தொடர்ந்து சரிந்து வருகிறது.

வறட்சி நோய் தாக்குதல் மற்றும் பல்வேறு காரணங்களால் ஏற்கனவே தென்னை விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம்.

தற்போது எப்போதும் இல்லாத அளவிற்கு தேங்காய் விலை மிகவும் குறைந்துள்ளது. இதனால், விவசாயிகள் கட்டுப்படியான விலை கிடைக்காமல் நஷ்டத்தை சந்தித்து வருகிறோம். ஆகவே தேங்காய் விலை சரிவை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேங்காய் ஆதார விலை, கொப்பரை கொள்மு தலை 150 ஆக உயர்த்த வேண்டும். மேலும் அரசு ஆதார விலை கொப்பரை கொள்மு தலை முறையாக செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் கொப்பரை கொள்முதல் நிர்ண யிக்கப்பட்ட இலக்கில் 15 சதவீதம் மட்டுமே கொள்முதல் நடை பெறுகிறது. ஆகவே கொள் முதலை முறைப்ப டுத்த வேண்டும்.

பாமாயில் இறக்கு மதியை தடை விதித்து தேங்காய் எண்ணையை நியாய விலைக் கடைகளில் வழங்க வேண்டும். தென்னை மரத்தி ற்கான காப்பீடுகளை முறைப்படுத்த வேண்டும். தென்னை நல வாரியம் அமைக்க வேண்டி விவசாயிகள் வைத்து வரும் கோரிக்கையை புறக்கணிக்காமல் தென்னை நல வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மாநில தென்னை உற்பத்தியாளர்களின் நட்பு அமைப்பு தென்னிந்திய தென்னை சாகுபடி ஆளர் சங்கம் மற்றும் விவசாயிகள் செய்திருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் எம்எல்ஏக்கள் பொள்ளாச்சி ஜெயராமன், செ. தாமோதரன், அமுல் கந்தசாமி, சூலூர் கந்தசாமி, முன்னாள் எம்எல்ஏ கஸ்தூரி வாசு, பா.ஜ.க வசந்தராஜன் உள்பட பலர் பங்கேற்று பேசினார்.

Tags:    

Similar News