- வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை சட்டமாக்க வேண்டும்.
- வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகளின் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.
திருத்துறைப்பூண்டி:
அகில இந்திய விவசாயிகளின் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு ஒன்றிய நகரம் சார்பில் திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம் அருகில் சாலை மறியல் நடைபெற்றது. இதில் உலகநாதன் முன்னாள் எம்.எல்.ஏ. குமரராஜா விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சாமிநாதன் விவசாய சங்க மாவட்ட பொருளாளர் ஜவகர் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் முத்து செல்வன் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் மகாலிங்கம் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் பாலு விவசாய சங்க ஒன்றிய தலைவர் வேதரத்தினம் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் சுந்தர் விவசாய சங்க நகர செயலாளர் மற்றும் விவசாய தொழிலாளர் சங்க விவசாய சங்க பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதில் வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை சட்டமாக்க வேண்டும், வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகளின் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்று கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.