உள்ளூர் செய்திகள்
கூலித்தொழிலாளியை தாக்கிய தந்தை-மகன் கைது
- நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்தது.
- 23-ந் தேதி அன்று மீண்டும் இருதரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த டி.கொத்தப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் முருகேஷ் (வயது33). கூலித்தொழிலாளியான இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த உறவினரான சிம்மிரெட்டி (54) என்பவருக்கும் நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்தது.
இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி அன்று மீண்டும் இருதரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரத்தில் சிம்மிரெட்டி, அவரது மகன் நடிரெட்டி ஆகிய 2 பேரும் சேர்ந்து முருகேஷையும், அவரது உறவினர் நாராயணன் என்பவரையும் சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த 2 பேரும் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து முருகேஷ் பாகலூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் சிம்மிரெட்டி, அவரது மகன் நடிரெட்டி ஆகிய 2பேரையும் கைது செய்தனர்.