சாம்பவர்வடகரை பகுதியில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு
- காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் மாணவ-மாணவிகள் அதிகமாக உள்ளனர்.
- நோய் தடுப்பு பணிகளை தீவிர படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாம்பவர் வடகரை:
சாம்பவர் வடகரை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த 15 நாட்களாக குழந்தைகள், பெண்கள் சிறுவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளிலும் சாம்பவர் வடகரை மற்றும் தென்காசி அரசு மருத்துவமனைகளிலும் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் மாணவ-மாணவிகள் அதிகமாக உள்ளனர்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் போது ரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவு கண்டறியப்படுவதால் டெங்கு காய்ச்சலாக இருக்கும் என்று பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். கொசுக்கள் மூலமாகவும் பொதுமக்களுக்கு காய்ச்சல் பரவுவதாக கூறப்படுகிறது. சுகாதாரத் துறையினர் நோய் தடுப்பு பணிகளை தீவிர படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பேரூராட்சியில் இருந்து சாக்கடைகளை சுத்தம் செய்தும் குப்பைகளை அகற்றும் நோய் தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.