உள்ளூர் செய்திகள்

ஊட்டியில் தீத்தடுப்பு ஒத்திகை

Published On 2022-06-20 10:03 GMT   |   Update On 2022-06-20 10:03 GMT
  • ஆரம்ப கட்ட தீ விபத்தை தடுப்பதற்கு எல்லா இடங்களிலும் தீயணைப்பு கருவிகள் தயார் நிலையில் உள்ளன
  • தனியார் நட்சத்திர ஓட்டலில் நடந்த தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் தீயணைப்பு துறையினர் செயல் விளக்கம் அளித்தனர்.

ஊட்டி:

ஊட்டியில் தனியார் நட்சத்திர ஓட்டலில் தீத்தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. இதில் தீயணைப்பு துறையினர் செயல் விளக்கம் அளித்தனர். இதில் மாவட்ட தீயணைப்பு அதிகாரி நாகராஜ், நிலைய அலுவர் பிரேம் தலைமையில் 12 பேர் அடங்கிய குழுவினர் கலந்து கொண்டு செயல்முறை விளக்கம் அளித்தனர்.

இதுகுறித்து தீயணைப்பு துறையினர் கூறுகையில், ஆரம்ப கட்ட தீ விபத்தை தடுப்பதற்கு எல்லா இடங்களிலும் தீயணைப்பு கருவிகள் தயார் நிலையில் உள்ளன. ஆனால் அவற்றை முறையாக பயன்படுத்த பெரும்பாலானோருக்கு தெரியாததால் தீயணைப்பு துறையினர் வருவதற்குள் தீ கட்டுக்கடங்காமல் பரவி விடுகிறது.

எனவே தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆஸ்பத்திரி டாக்டர்கள், நர்சுகள் மற்றும் ஊழியர்களுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது என்றார்.

இதில் ஓட்டல் நிர்வாகிகள், பணியாளர்கள் என 50 பேர் கலந்து கொண்டனர். தீயணைப்பு துறையினரீன் இந்த தீத்தடுப்பு ஒத்திகை தங்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக அமைந்ததாக அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்

Tags:    

Similar News