உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் 7-வது நாளாக தொடரும் விசைப்படகு தொழிலாளர்களின் போராட்டம்- தீர்வு காண தமிழக அரசுக்கு கோரிக்கை

Published On 2023-02-11 09:28 GMT   |   Update On 2023-02-11 09:28 GMT
  • தூத்துக்குடியில்இருந்து 240-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகிறது.
  • தொடர்ந்து 7 நாட்களாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் உள்ள விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 240-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் தினமும் கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகிறது.

இந்நிலையில், தங்களுக்கான பங்குத் தொகையை அதிகரித்து வழங்க வேண்டும் என மீன்பிடி தொழிலாளர்கள் வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறனர்.இந்நிலையில் நேற்று தூத்துக்குடி உதவி கலெக்டர் அலுவலகத்தில் விசைப்படகு உரிமை யாளர்கள் தொழிலாளர்க ளுடனான பேச்சுவார்த்தை நடைபெற்றது,

அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற் பட்டது. இந்நிலையில் ஒரு தரப்பினர் மீன் பிடிப்பதற்காக புறப்பட்டு சென்றனர். ஆனால் அதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து மீன்பிடி துறைமுக நுழைவாயில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலை வருகிறது. தூத்துக்குடியில் தொடர்ந்து 7 நாட்களாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாமல் இருந்து வருகின்றனர். மீனவர்களின் இந்த பிரச்சனையை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர தமிழக அரசு தேவையான நடவடிக்கையை உடனடியாக மேற்கொண்டு மீனவர்களின் குறைகளை தீர்க்க வேண்டும் என்று மீனவர்கள் ஒரு தரப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News